பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைய பேருந்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணம் 25% – 30% வரை அதிகரிக்கப்படும், என தனியார் பேருந்து உரிமையார்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய பேருந்து கட்டணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
