
இன்று சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது
இன்று செவ்வாய்க்கிழமை சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதனால், பொதுமக்கள் விற்பனை நிலையங்களில் எரிவாயுவிற்காக காத்திருக்க வேண்டாம், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்று திங்கட்கிழமை செலுத்தப்பட்டதாகவும், குறித்த கப்பல்கள் மூலம் 7,500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும், லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
