பதுளை நகரில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்-

பதுளை நகரில் ஊவா மாகாண கட்டிடத் தொகுதிக்கு முன்பாக அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

கடந்த 9 ம் திகதி காலி முகத்திடலில் கோட்டா கோ கமவில் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்ய கூறியும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் பதுளை நகரில் JVP யின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

இளைஞர்களும், பெருந்திரளான பொதுமக்களும் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.