
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சூனியம் மூலம் வழிநடத்த முயலவில்லை
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சூனியம் மூலம் நான்வழிநடத்த முயலவில்லை”, என ஞானாக்கா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சண்டே டைம்ஸ் இற்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மே9 ஆம் திகதி அனுராதபுரத்தில் வன்முறை கும்பல் தனது வீட்டைத் தாக்கிய பின்னர், தனது சொந்த வியர்வை, உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட அனைத்தும் இப்போது எரித்து அழிந்துவிட்டதாக, ஞானாக்கா தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்வது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தல் வழங்கவில்லை, அரசியல் விவகாரங்கள் எதுவும் ஜனாதிபதியுடன் பேசப்படவும் இல்லை.
ஜனாதிபதி அல்லது வேறு யாருக்கும் வழங்கிய ஆசீர்வாதங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் நினைவில் இல்லை, என தெரிவித்துள்ள ஞானக்கா,
.
இலங்கையின் சமீபத்திய தலைவிதியை அதன் தலைவர்கள் மூலம், குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சூனியம் அல்லது சூனியம் மூலம் வழிநடத்த முயன்றதான, கருத்தை மறுத்துள்ளார்.
ஜனாதிபதியும் அவரது மனைவியும் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளனர், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் போராடி வெற்றி பெற்ற காலம் அது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறை வந்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி பல மாதங்களாக வரவில்லை, என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வி.ஐ.பிகளுக்கு தனது பணிகளைச் செய்ய ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள் கலைப்பதற்காக சபிக்கப்பட்ட தண்ணீரை விநியோகித்ததாகவும், தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அவர், ‘நான் அப்படிப்பட்டவர் அல்ல’ என தெரிவித்துள்ளார்.
