
நாளுக்கு நாள் ஏமாற்றமடைந்து கடும் விரக்திக்குள்ளாகும் மக்கள்
-நுவரெலியா நிருபர்-
நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்று சனிக்கிழமை, மக்களும், வாகன சாரதிகளும் நீண்ட வரிசைகளில் நின்றிருந்தனர்.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் நீண்டநேரம் வரிசைகளில் காத்திருந்தவர்களில் பலர் ஏமாற்றத்தோடு வெறுங்கையுடன் வீடு திரும்பினர்.
விரக்தியால் மேலும் சிலர், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர்.


