ஜி7 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியில் இடம்பெறுகின்ற உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி7 நாடுகளின் மாநாட்டில், இணங்கப்பட்ட கடித வரைவு ஒன்றில், இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக நிதியமைச்சர்கள் தெரிவித்ததாக, தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஜி7 நாடுகளின் அறிக்கையில், இந்தியப் பெருங்கடல் தேசத்திற்கான நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதில் உறுதியாக இருப்பதாகவும், சாத்தியமான கடன் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளது.