
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை நேரத்தில் மின்வெட்டு இல்லை
கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், குறித்த காலத்தில் மாலை 6.30 க்கு பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரையான காலப்பகுதிக்குள் பரீட்சை இடம்பெறும் காலத்திலும், மாலை 6 மணியின் பின்னரும் மின்தடையை அமுலாக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
