ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவிற்கு வழங்க தீர்மானம்

விவசாயிகளுக்கு இரசாயன உர மூட்டை ஒன்றினை 10,000 ரூபாவிற்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உரப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது.

இந்திய கடன் அடிப்படையில் 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இம்மாத இறுதிக்குள் இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.