
எதிர்வரும் சனிக்கிழமையின் பின்னரே பெற்றோல் விநியோகம்
எதிர்வரும் சனிக்கிழமையின் பின்னரே பெற்றோல் விநியோகிக்கப்படும், என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை முதல் பெற்றோல் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அதற்கு தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை, நாளை வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களும் பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது, என்பது குறிப்பிடத்தக்கது.
