16 இலட்சம் பெறுமதியான பேருந்து திருட்டு : இருவர் கைது

சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்து ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பின்வத்த பொலிஸ் பிரிவிற்குபட்ட காலி வீதிக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

குறித்த திருடப்பட்ட பேருந்து காலி முகத்திடலுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட, 28 மற்றும் 29 வயதுடைய, அலவ்வ மற்றும் வாத்துவ பிரதேசங்களை சேர்ந்த சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.