நாட்டில் மழையுடனான வானிலை

நாடு முழுவதும் மழையுடனான வானிலை காணப்படும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, வட மாகாணத்திலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் பல சந்தர்ப்பங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான அளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.