
த.தே.கூ.இனால் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
முள்ளிவாய்க்கால் 13 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது .
இதன்போது, முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூரும் முகமாக தீபச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கூட்டுப் பிரார்த்தனையும் இடம்பெற்றது .
இதனைத்தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன்போது பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடனும், ஆதரவுடனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



