சனத் நிஷாந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான, சனத் நிஷாந்த, மிலான் ஜெயதிலக்க உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி திங்கட்கிழமை அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைதான நான்கு பேரும் இன்று புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.