விநியோக நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படும்

வழமையான பெற்றோல் விநியோகம் நாளை வியாழக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும், என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை தொன் கணக்கிலான எரிபொருள் நாட்டை வந்தடைந்த நிலையிலேயே இவ்வாறான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதால் அத்தியாவசிய தேவையின்றி பெற்றோலுக்காக இன்று வரிசையில் காத்திருக்க வேண்டாம், எனவும் கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.