மீண்டும் எரிபொருள் விநியோகம் வழமைக்கு

இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும், என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விடுமுறை தினம் என்பதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று எரிபொருள் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காலை வேளையில் எரிபொருள் கிடைக்கப்பெறும், ஏனைய மாகாணங்களுக்கு மதிய வேளையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.