
மன்னார் இளைஞர்களால் சாந்திபுரம் விகாரை சுத்தப்படுத்தும் செயற்பாடு முன்னெடுப்பு
-மன்னார் நிருபர்-
இளைஞர்கள் மத்தியில் ‘சமூக ஒத்திசைவை பலப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் வாழ்வுக்கான தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ரஹமா நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இளைஞர் செயற் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சாந்திபுரம் பெளத்த விகாரை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது
பௌத்த மக்களால் வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், திருமதி ரெஜினா ராமலிங்கம் தலைமையில் லியோ மற்றும் இளைஞர் கழகங்கள், தன்னார்வ இளைஞர்கள் இணைந்து குறித்த சிரமதான பணியை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த சிரமதான பணியில் சர்வமத இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வை செயற்பாட்டு ரீதியாக வெளிப்படுத்தினர்.
குறித்த சிரமதான பணியில் அதிகளவான இஸ்லாமிய இளைஞர் யுவதிகளும் கலந்து சிரமதான பணியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.




