வெற்றுக்காணி ஒன்றில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு

-யாழ் நிருபர்-

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

நுங்கு வெட்டுவதற்காக வெற்றுக்காணி ஒன்றிற்கு சென்ற இளைஞர்கள் சிலர் இந்த வெடி பொருட்களை கண்டுள்ளனர்.

அதன் பின்னர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த வெடிபொருட்கள் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வெடிபொருட்களுள் கைக்குண்டு ஒன்று, கண்ணிவெடி ஒன்று மற்றும் தோட்டாக்கள் என்பன உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.