பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க விஷேட ஏற்பாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக ரி56 ரக இரண்டு துப்பாக்கிகளை பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவிற்கு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவது அவசியம்.

இதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக 06 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பும் மேலதிகமாக 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வழங்கப்படவுள்ளனர். நாட்டில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்தே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.