
நியூசிலாந்திடமிருந்து இலங்கைக்கு 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவி
உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக, நியூசிலாந்து இலங்கைக்கு 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக, நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனயா மஹுதா டுவிட்டர் பதிவினூடாக இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், அதனால் பாதிக்கப்படக்கூடிய பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்கும் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இது இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான 30 வருட கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும், கடந்த 30 வருட காலத்திற்குள் நியூசிலாந்து இலங்கைக்கு 25.07 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபிவிருத்தி திட்டங்களுக்காக உதவியாக வழங்கியுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

