பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
2022/2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை குறித்த நேர்முகத்தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
