ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்

-கல்முனை நிருபர-

மட்டக்களப்பு – ஏறாவூரில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூரில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் தாக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தயவர்களுக்கு எதிராகவும், அவர்களை கைது செய்யும்படியும் வலியுறுத்தி தொழிற்சாலை ஊழியர்களால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆடைத் தொழிற்சாலையானது முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகின்றது.