2 வருடங்களுக்குப் பின் நியூசிலாந்து முழுமையாக திறக்கப்பட்டது

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்களது எல்லைப் பகுதிகளை மூடி உத்தரவிட்டன.  2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நியூசிலாந்து அரசு தங்கள் நாட்டு எல்லைகளை மூடியது.

நியூசிலாந்து அரசு கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்திவந்த நிலையில் நாட்டின் எல்லைகளை தற்போது முழுவதுமாக திறந்துள்ளது.

கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் நியூசிலாந்தில் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் தங்களது எல்லைப் பகுதிகளை அந்நாட்டு அரசு திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வெளியிட்டுள்ளார்.