
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள கூடும் என எச்சரிக்கை
இன்று புதன்கிழமை இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும், என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்று கூடவேண்டாம் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படக்கூடும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
