நாளை ஊரடங்கு தளர்த்தப்படுகின்றதா?

அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் நாளை வியாழக்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தேவையேற்பட்டால் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்த வாய்ப்புள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.