
மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு, அதிபர் ச.சதீஸ்வரன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலய முறைசாரா கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.தயானந்தன், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் அ.ஜெகநாதன் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.



