பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

காலிமுகத்திடல் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவிய வன்முறைகளில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். 250இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆளும் கட்சியைச் சேர்ந்த 103 பேரின் சொத்துக்கள் அடித்துடைக்கப்பட்டன – சூறையாடப்பட்டன. இதில், முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கு சொந்தமான 38 வீடுகள் தீக்கிரையாக்கப்படடுள்ளன. 88 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 47 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பிரதேசசபை தவிசாளர், இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 250இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 232 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் – அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.