துப்பாக்கி சூட்டில் நால்வர் படுகாயம்
ரத்கம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போதே நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.
