ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, “கோட்டகோகம” போராட்டத் தளத்தை அரசாங்கம் சீர்குலைக்கும் பட்சத்தில், அனைத்துக் கலந்துரையாடல்களிலிருந்தும் விலகவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது அறிவித்துள்ளார்.
மேலும் போராட்டத் தளத்தை சீர்குலைக்கும் நிலையில் தற்போதைய பொருளாதார , அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு உதவுவதை நிறுத்துவதாகவும் அரசாங்கக் கட்சித் தலைவர்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
