பிரதமரின் ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம்
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் அலரிமாளிகைக்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் இன்று திங்கட்கிழமை ஒன்றுகூடி ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு சென்று பிரதமரை பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தினர்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி, அலரிமாளிகைக்கு எதிரே மைனகோகம ஆர்ப்பாட்டமும் இடம்பெற்று வருகின்றது.
