
அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகம்
விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும், என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான எல்.பி எரிவாயு இல்லை எனவும், தொழிற்சாலை நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு விநியோகிக்ப்படும். எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம், என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
