நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை
நாட்டின பல பகுதிகளில் மழையுடனான வானிலை காணப்படும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது 50 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில், குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்று அவ்வப்போது 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
