எரிபொருள் விநியோகம் நாளை முதல் புதிய முறைமை
எரிபொருள் விநியோகத்தை நாளை திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்துவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, மோட்டார் சைக்கிள்: ரூ. 2,000, முச்சக்கர வண்டி: ரூ. 3,000, கார், வேன், ஜீப்: ரூ. 8,000 என்றவாறு விநியோகிக்கப்படவுள்ளது.
பஸ், லொறி, வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
