நாளை முதல் ஒரு வாரத்திற்கு நாடு முடங்குமா?

தற்போதைய நெருக்கடிக்கு நாடாளுமன்றம் தீர்வு காணும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மே 17ஆம் திகதி பொதுமக்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.