நேற்று நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனம்

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்  ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.