பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வாபஸ்

தியத்த உயனவில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் வசந்த முதலிகே அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நேற்று வியாழக்கிழமை மாலை முதல் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதையடுத்தே போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.