நாடாளுமன்ற வளாகத்தில் “ஹொருகோகம”

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை அண்மித்து பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

மேலும், நேற்று புதன்கிழமை இரவு நாடாளுமன்ற வளாகத்தை அண்மித்த வீதிகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகளுடனான வீதித் தடைகளை மாணவர்கள் உடைத்தெறிந்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது “ஹொருகோகம” என்ற பெயரிலான மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.