மட்டக்களப்பு வர்த்தகர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

நாளை வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை என்பதால் ஏறாவூர் பிரதேச வர்த்தகர்களதும், பங்களிப்பினை வழங்குவதில் சிரமம் இல்லை என்ற படியினால் குறித்த பிரதேச வர்த்தக சங்கமும் மட்டக்களப்பு வர்த்தகர்கள் சார்பில் குறித்த ஹர்த்தாலிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது, என இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஏறாவூர் வர்த்தக சங்க செயலாளர் அஸ்மி தெரிவித்தார்.

மேலும்,

அனைத்து வர்த்தகர்களும் நாளைய தினம் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி தேசிய ரீதியான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

நாளைய தினம் தங்களுக்கு தேவையான பொருட்களை இன்றைய தினமே கொள்வனவு செய்து மக்கள் வீன் அசௌகரியங்களை தவிர்ந்து கொள்ளுமாறு ஏறாவூர் வர்த்தக சங்கம் சார்பில் வேண்டிக் கொள்கிறோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.