டயகம நகரில் இருந்து தனி மனிதர் ஒருவர் நடை பவனியாக போராட்டம்

-நுவரெலியா நிருபர்-

கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை டயகம நகரில் இருந்து தனி மனிதர் ஒருவர் நடை பவனியாக தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த தனிமனித நடைபவனி போராட்டம் காலிமுகத்திடலில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்வதற்காக இன்னும் மூன்று தினங்களில் சென்று அடையும் நோக்குடன் ஆரம்பித்துள்ளார்.