‘டுவிட்டர்’ பயன்படுத்தவும் கட்டணம் அறவீடு?

வர்த்தக மற்றும் அரச நடவடிக்கைகளுக்காக TWITTER சமூக வலையமைப்பை பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் கட்டணமொன்றை அறவிட டெஸ்லா நிறுவனத்தின் பிரதானி  எலான் மாஸ்க் தீர்மானித்துள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை ஈலோன் மாஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யும் தீர்மானத்திற்கு நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கிய பின்னணியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சாதாரண பயன்பாட்டாளர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் அறவிடப்படாது எனவும், சாதாரண பயன்பாட்டாளர்கள் இலவசமாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.