தாயின் காரை ஓட்டிச் சென்ற நான்கு வயது சிறுவன்

நெதர்லாந்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் காரை ஓட்டிச் சென்று அதனை நிறுத்தி இருந்த கார்கள் மீது மோதவிட்டுள்ளான்.

அந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை இரவு வாகனத் தரிப்பிடத்தில் இருந்த இரு கார்கள் மீது மோதவிட்டபின், இரவு ஆடையுடன் வெறுங்காலோடு அங்கிருந்து வெளியேறி சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளிருக்கு மத்தியில் வீதியில் தனியாகச் செல்லும் அந்த சிறுவனை கண்ட பாதசாரிகள் பொலிஸாரை அழைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதன்மூலம் அந்தக் காரை சிறுவனே செலுத்தி இருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.