
யாழ்.வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் திருட்டு
-யாழ் நிருபர்-
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் வசிக்கும் வலி.மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கிருபாகரன் வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் அவரது தங்கையின் மகனது பிறந்தநாள் கொண்டாட்டத்திக்காக குடும்பத்தினரோடு சென்றுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் அவரது வீட்டினை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் எரிவாயு சிலிண்டர், கிரைன்டர், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வங்கி தானியங்கி இயந்திர அட்டை (ATM அட்டை) என்பற்றினை இவ்வாறு களவாடிச் சென்றுள்ளனர்.
பிரதேச சபையின் உறுப்பினர் வீட்டிற்கு வந்து பார்த்தவேளை வீடு உடைத்து திருட்டு போயிருந்த விடயம் அவருக்கு தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
