மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும்
-யாழ் நிருபர்-
மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் இருந்து வரும் மீனவர்களையும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்குள் வருகின்ற மீனவர்களையும், பார்க்கவேண்டும் என்பது நிலைப்பாடு, என பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள்ள எல்லைதாண்டிவரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக எமக்கு நிரந்தர தீர்வாக அமையாது.
இதனை மனிதாபிமான அடிப்படையாக பார்க்கவேண்டும். தொப்புள் கொடி உறவுகளுக்கிடையில் இதனை பார்க்ககூடாது என்பது எமது நிலைப்பாடு.
நிச்சயமாக இலங்கை மீனவர்கள் தமிழக கடற்பரப்புக்குள் வருவதை கூட அவர்களை வெளியிலே கொண்டுவருவதற்கு துணைநிற்போம்.
கைது செய்யப்படுவர்கள் அனைவரும் படகில் ஒருநாள் வேலைக்காக மீன்பிடிப்பதற்காக செல்லுவர்கள் இவர்களை குற்றம் செய்வதை போன்று பார்ப்பதை விட மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் இருந்து வரும் மீனவர்களையும் பார்க்க வேண்டும் இந்தியாவில் இருந்து வருகின்ற மீனவர்களையும் பார்க்கவேண்டும் என்பது நிலைப்பாடு என்பதாகும், என அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் உள்ளிட்டவர்களுடான சந்திப்பு இன்று யாழ் தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பினை முடித்த பின்பு ஊடகவியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத்தலைவர் அண்ணாமலை இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
அரசியல் தலைவராக ஒரு நாடாக ஒரு யுகத்தின் அடிப்படையில் பதில் சொல்லுவது சரியாக இருக்காது ஒரு லட்சத்தி நாற்பத்தி மூவாயிரம் பேர்கள் இந்திய தமிழகத்தில் அகதிகளாக இன்னும் இருக்கின்றார்கள் அவர்களில் பலர் பாரதிய ஜனதா கட்சியில் பல பிரச்சனைகளை எடுத்து சொல்லியிக்கின்றனர்.
அவர்களுக்கான தீர்வினை பாரதிய ஜனதா கட்சி முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டுவருகின்றது.
அதற்காக மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இதற்காக முழுமையான தீர்வு இந்திய பிரதமர் ரரேந்திர மோடி அவர்களின் அரசாங்கம் எடுப்பார்கள் என்பதில் எந்ததொரு மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது.
தமிழகத்தின் முதலமைச்சர் மு.ஸ்டாலின், மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்களே சொல்லியிருப்பதோ இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அடைக்கலம் கோரி வந்துள்ள தொப்புள் கொடியுறவினை மனிதாபிமாகத்தான் நடாத்துவோம் ஒழிய குற்றம் செய்துவிட்டு இன்மொரு நாட்டுக்கு வந்தார்கள் என்று தான் உறுதியும் அழித்துள்ளோம்.
இது இரத்த சொந்தங்கள் தொப்பிள் கொடி உறவுகள் அதனை போன்று இலங்கையின் பொருளாதார நிலையும் சரியாக வேண்டும் என்பது நாம் எண்ணியுள்ளோம்.
அதனையும் மனிதாபிமாகத் தான் இந்திய அரசாங்கம் பார்க்கும் எந்தொரு மற்றுக் கருத்தும் இருக்கமுடியாது.
இலங்கை வடக்கில் 2009 ஆண்டில் உலகத்தில் எங்கும் இல்லாத நிலையில் இந்திய அரசாங்கம் 46 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இந்திய வந்து அதிகார பகிர்வுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி கொண்டுருக்கின்றது.
இதனை பிரித்து பார்ப்பதை விட 1974ஆம் ஆண்டு வரை இலங்கை இந்திய ஆகிய நாடுகள் தொப்பிள் கொடி உறவுகள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றார்கள் என்று இலங்கையில் வருகின்ற இந்தியவர்கள் எல்லா இடங்களுக்கும் போது கிடையாது.
இரண்டு நாடுகளும் பிரிந்து போனது போன்று இல்லாது கலாச்சார ரீதியாக தமிழர் என்றாக ஒன்றாக இணைந்து இருக்கின்றோம் இது மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தமிழக மீனவர்கள் வருவது சர்வதேச ரீதியாக இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் வருவது எப்பொது விருப்பத்துடன் கிடையாது.
யாருமோ இலங்கை சிறையில் வந்து இருக்கவேண்டும் என்ற நோக்கில் வருவது கிடையாது. இவர்களை வேறவர்கள் என்று பார்ப்பது கிடையாது, இதனை சொந்தங்களாகத்தான் பார்க்கின்றோம், என பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இச் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தர்த்தன், செல்வம் அடைக்கல நாதன், தமிழரசுக்கட்சியின் தலைவர் சோ.மாவைசேனாதிராஜா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத்தலைவரின் உயர்நிலை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.