பா.ஜ.க தமிழ்நாட்டு தலைவர் – த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட சந்திப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பா.ஜ.க தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலைக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.