அம்பாறை ரஹ்மத் பவுண்டேஷனினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
-கல்முனை நிருபர்-
அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் குடிநீர் வசதிகள், பாலம் அமைத்தல், கல்விக்கு உதவுதல், ஏழைகளுக்கு இல்லிடமமைத்தல் உட்பட பல மனித நேயப்பணிகள் இடம்பெற்று வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக புனித நோன்புப்பெருநாளை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்தில் அடையாளப்படுத்தப்பட்ட விஷேட தேவையுடையவர்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வருமானம் குறைந்தவர்களுக்கான, உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனையில் ரஹ்மத் பவுண்டேஷன் தலைமையகத்தில் நடைபெற்றது.
Y.W.M.A. பேரவையின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வானது, ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் நேரடி கண்காணிப்பிலும், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் தலைமையிலும் நடைபெற்றது.