
பா.ஜ.கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ் விஜயம்
-யாழ் நிருபர்-
பா.ஜ.கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ்.நல்லைக் கந்தன் ஆலய வழிபாட்டுடன் குடாநாட்டு பயணத்தை ஆரம்பித்தார்.
இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இவ்வாறு ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்களை நிரஞ்சன் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் அழைத்து வந்தனர்.
மேலும், இவர்கள் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். இந்திய கலாச்சார மத்திய நிலையத்தினையும், அங்கு அமைந்துள்ள திரைப்படகலைக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து, யாழ் பண்ணைகடற்கரையில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கும் விஜயம் மேற்கொண்டார்.
பின், அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டுவந்த இந்திய மீனவர்கள் தடுப்பில் வைக்கப்பட்ட நிலையில், அவர்களின் சுகநலங்களையும் விசாரித்து அவர்களுக்கான உலர் உணவுகள் உள்ளிட்ட பொதிகளும் வழங்கிவைத்தார்.
இந்த விஜயத்தின் போது யாழ். இந்திய உதவித்துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் பாஸ்கர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரின் மேலதிக செயலாளர் விஸ்வநாதன் அப்பானி உள்ளிட்ட முக்கியத்தவர்களும் கலந்து கொண்டனர்.




