ஜனாதிபதி தலைமையில் இன்று விஷேட கலந்துரையாடல்
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஜனாதிபதி தலைமையிலான இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த யோசனை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
