கடற்தொழிலாளர் சங்கத் தலைவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதி விபத்து

-யாழ் நிருபர்-

வடமராட்சி கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் வடமராட்சி கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் அந்த படகில் தொழில் செய்த கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

இருப்பினும், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.