
ராகலையில் இருந்து காலி முகத்திடலை நோக்கி நடைபயணம் ஆரம்பம்
-நுவரெலியா நிருபர்-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெறுக்கடியான நிலைக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும், உரம் பொருளாதாரம் , எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடபுசல்லாவையைச் சேர்ந்த இளைஞன் நடைபயணத்தை இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்துள்ளார்.
உடபுசல்லாவை சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் என்பவர் இன்று காலை 9.30 மணியளவில் ராகலையில் வைத்து இடம்பெற்ற மத வழிபாடுகளின் பின்னர் நுவரெலியா, ஹட்டன், கினிகத்தனை, அவிசாவளை வழியாக கொழும்பு காலி முகத்திடலை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளார்.
இவ் நடைபயணத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து சத்தியசீலனுக்கு வரவேற்பும் , உற்சாகமும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



