இலங்கைப் பெண்ணின் சடலம் 19 நாட்களின் பின்னர் ஓமானில் நல்லடக்கம்
ஓமான் நாட்டில் மரணமடைந்த இலங்கைப் பெண்ணின் சடலம் 19 நாட்களின் பின்னர் ஓமானில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மரணமடைந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு ஓமான் நாட்டில் மரணமடைந்துள்ளார்.
ஓமான் நாட்டிற்கு தொழில் நிமித்தம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சென்ற இவர் கடந்த 9 ஆம் திகதி அங்கு மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.
திடீரென மரணமடைந்த பெண் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஓமான் நாட்டு பொலிஸார், வைத்திய பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களின் ஒப்புதலுடன் நேற்று புதன்கிழமை பெண்ணின் உடல் ஓமான் நாட்டில் நல்லடக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
