இ.போ.ச வழமைபோல இன்றும் இயங்கும்

இன்று வியாழக்கிழமை போராட்டங்கள் இடம்பெற்றாலும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் வழமை போன்று  சேவையில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில்இ இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தினர், வழமை போல்  சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.